தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடைக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் கொலுகும் என்னை பார்த்தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்
விண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள்
அள்ளி கொடுத்த கைகள் அசைவில் வந்தேனே
காணல்கள் தின்னும் கன்னங்கள்
கனிந்து நிற்கும் இதழ்கள்
உதவி செய்யும் பார்வை
உயிர் குறைந்ததென்ன பாரத போர்கள்
முடிந்தபின்னும் கொடுமைகள் இங்கே குறையவில்லை
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலே
சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லே
படை நடத்தும் வீரன் பசித்தவர்கள் தோழன்
பகைவருக்கும் நண்பன் அழுக்கில் அவன் என்ன
தாய் பாலை உண்ட ரத்தம்
தரை விழுந்ததென்ன இவன் பேருக்கு ஏற்ற வண்ணம்
நிலம் சிவந்ததென்ன தீமைகள் என்றும்
ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி
தாமதமாக வருவதென்ன
படம்: மின்னலே
பாடியவர்: திப்பு, ரூப் குமார் ரத்தோடு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்
ஐஞ்சு நாள் வரை அவள்
பொழிந்தது ஆசையின் மழை
அதில் நனைந்தது நூறு
ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை
விபரம் ஏதும் அவள் அறிய வில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்
ஐன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என என்னை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
படம்: காதல் மன்னன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே (உன்னை)
(உன்னை)
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன் என்னுயிரில் நீ பாதியென்று உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன் எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்கச் சொல்வதில் ஞாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ யே யே யே யே யே தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ
(உன்னை)
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீயிருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை இமைய மலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ யே யே யே யே யே தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ